எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக. 11- பிரிட்டனில் முன்னாள் ரசிய உளவு அதிகாரி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப் பட்டது தொடர்பாக, ரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெ ரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

பிரிட்டன் குடியுரிமை பெற்ற செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஸ்கிரி பால் மீது கடந்த மார்ச் மாதம் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரசியா மீது கூடு தல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

சர்வதேசச் சட்டங்களுக்குப் புறம்பாக, தனது சொந்த மக்க ளுக்கு எதிராகவே ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை ரசியா பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அரசு இந்த மாதம் 6-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 1991-ஆம் ஆண்டில் இயற் றிய ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டம், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது.

அந்தச் சட்டத்தின் அடிப் படையிலேயே ரசியாவுக்கு எதி ராகப் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருளாதாரத் தடைகள், நாடாளுமன்ற அறி விக்கைக் காலமான 15 நாள் களுக்குப் பிறகு, வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த 1990-ஆம் ஆண்டுக ளில், ரசிய ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்அய்6-இலும் ரகசியமாக இணைந்து பிரிட்டனுக்கு ராணுவ ரகசியங்களை அளித்து வந்தார்.

அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரசிய அதிகாரி கள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர். எனி னும், உளவுக் கைதிகள் பரி மாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடு விக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரி பால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.

இந்தச் சூழலில், செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யூலியா மீது கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அதையடுத்து, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இரு வரும் சாவின் விளம்புக்கு சென்று திரும்பினர்.

இந்த நச்சுத் தாக்குதலுக்கு ரசியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வரு கிறது. எனினும் ரசியா அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்ட மாக மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரிட் டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரசியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன. ரசியாவும் அதற் குப் பதிலடியாக அந்த நாடுக ளின் தூதர்களை வெளியேற்றது.

இதனால், ரசியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், நச்சுத் தாக்குதல் விவகாரம் தொடர் பாக ரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெ ரிக்கா அறிவித்துள்ளது பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடைகளை ஏற்க முடியாது

பிரிட்டனில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத் தோடு தொடர்புபடுத்தி, அமெ ரிக்கா தங்கள் மீது பொருளா தாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரசியா திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ரசிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ் கோவ் கூறியதாவது:

ஏற்கெனவே, எங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் சட்டத்துக்குப் புறம் பானவை என்பது எங்கள் நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலையில், பிரிட்டன் நச்சுத் தாக்குதலை எங்களுடன் தொடர்புபடுத்தி, அதற்காக எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெ ரிக்கா கூறுவது, முற்றிலும் ஏற் புடையது அல்ல என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner