எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாங்காக், ஆக. 11- தாய்லாந்தில் குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்ட னர். 18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக் குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறு வர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண் டில் நடைபெற்ற மறக்கமுடி யாத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கி டையே, குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால் அவர்களுக்கு தாய்லாந்து குடி யுரிமை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கவுர வித்துள்ளது. இதனை வரவேற் பதாக தெரிவித்துள்ள அய்க்கிய நாடுகளின் அகதிகள் ஆணை யம், சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள் ளது. தற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner