எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாஸ்கோ, ஆக.12 தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தால், அதற்கு அனைத்து விதங்களிலும் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவுக்கு ரசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரசியப் பிரதமர் டிமித்ரி மெத்வெடேவ் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிரிட்டனில், முன்னாள் ரசிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்தத் தடைகளின் ஒரு பகுதியாக, ரசிய அரசுக் கட்டுப் பாட்டில் உள்ள வங்கிகளின் அமெரிக்க டாலர் பரிமாற்றம் முடக்கப்படும் என்று கூறப்படு கிறது.

அவ்வாறு ரசிய வங்கிகளின் செயல்பாடுகளுக்கோ, கரன்சி களுக்கோ தடை விதிக்கப்படுமே யானால், எங்கள் நாட்டின் மீது பொருளாதாரப் போர் பிரகடனம் செய்யப்பட்ட தாகக் கருதப்படும்.

எனவே, அத்தகைய தடை களுக்கு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேவைப் பட்டால் பிற’ வழிமுறைகளிலும் ரசியா மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும்.

ரசியாவின் தவறான நட வடிக்கைகளைத் தடுப்பதற்காவே பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா காரணம் கூறி வருகிறது.

ஆனால், தனக்கு அதிக பலம் வாய்ந்த ஒரு போட்டியாளராக ரசியா இருப்பதை அந்த நாடு விரும்பவில்லை என்பதும், போட்டியிலிருந்து ரசியாவை விலக்க வேண்டும் என்பதுமே இத்தகைய பொருளாதாரத் தடை களுக்குக்கான உண்மைக் கார ணம் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner