எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாசிங்டன், ஆக.12 பாகிஸ் தானுக்கு அளித்து வரும் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க அளித்து வரும் 2 பில்லியன் நிதி ஆகியவற்றுக்கு தடை விதித்து அமெரிக்கா நடவ டிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அரசால் ஆண்டு தோறும் அளித்து வரப்பட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி மற்றும் பாகிஸ் தான் ராணுவ வீரர்களுக்கான கூட்டு ராணுவப் பயிற்சி ஆகியவற்றுக்கு அமெரிக்க அரசு தடை விதித்து நட வடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து இருநாட்டு அரசுகளும் இதுவரை நேரடி யாக இல்லாமல் மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

இதனால் பாகிஸ்தான் அரசு அதன் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக சீனாவுடனான தனது உறவை பலப்படுத்தும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிட மாக விளங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு இதுவரை 33 பில்லியன் டாலர்களை நிதி யாக வழங்கி அமெரிக்கா முட் டாள்தனமாக செயல் பட்டுள்ளது. ஆனால் அமெ ரிக்க தலைவர்களை முட் டாள்கள் என்று நினைத்து அதற்கு மாற்றாக  பொய் களையும், வஞ்சகத்தையும் பாகிஸ்தான் வழங்கிவிட்டது.

பயங்கரவாதிகளின் புகலிட மாக பாகிஸ்தான் திகழ்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா போராடும் போது அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner