எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நியூயார்க், ஆக. 13- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது.

இதனால் உலக அழிவை ஏற்படுத் தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)      தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985ஆ-ம் ஆண்டுவரை சில தக வல்களை அனுப்பிய இந்த செயற்கைக் கோள்கள் பின்னர் செயலிழந்து சூரிய னின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப் பட்டுள்ளன.

இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுக ளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை விண் ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி சனிக் கிழமை (ஆக. 11) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறந்து, சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக் கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரி யனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகு தியில் பார்க்கர் சோலார் புரோப் பய ணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப் படுகிறது.

இந்த செயற்கைகோள் அதீத தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப் பிடத்தக்கது.

மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத் தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விண்ணில் செலுத்து வதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல் லும் ’டெல்ட்டா-4’  (Delta IV ) ராக் கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப் பட்டது. இந்த குறைபாடு சீரடைந்த பின்னர் விரைவில் விண்ணில் ஏவப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner