எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக. 14- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட் டாக விண்ணில் செலுத்தின. பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது.

இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரியப் புயல் (ஷிஷீறீணீக்ஷீ கீவீஸீபீ)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985ஆ-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப் பட்டுள்ளன. இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (றிணீக்ஷீளீமீக்ஷீ ஷிஷீறீணீக்ஷீ றிக்ஷீஷீதீமீ) எனும் செயற்கைக்கோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியள வில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ (ஞிமீறீtணீ மிக்ஷி) ராக்கெட்டை உந்திச்செலுத் தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரிய வந்தது. இதைதொடர்ந்து,  ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட் டது.  இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1.01 மணிக்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் விமானப்படை தளத்தில் இருந்து ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner