எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஆக. 14- வங்காளதேசத் தில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற் றும் தேசியவாத ஜமாத் கூட் டணி அழைப்பு விடுத்தது.

நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-.2.-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதி யில் அடையாளம் தெரியாத நபர்களால் பேருந்து மீது பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதா பமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகா யம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த வன் முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் வன்முறையை தூண்டியதாக வும், கொலை மற்றும் வெடிப் பொருட்கள் தடை சட்டத்தின் கீழ்  முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்டோர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட் டன.

கொமில்லா சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை பின்னர் சிறப்பு அதிகார சட்டத் தின்கீழ் பயங்கரவாத வழக்காக மாற்றப்பட்டது.

இதற்கிடையில், தனது கணவரின் பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெய ரால் வெளிநாடுகளில் இருந்து சுமார் இரண்டரை லட்சம் டாலர்கள் நிதி பெற்றதாக தொடரப்பட்ட மற்றொரு வழக் கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக் கப்பட்டது.

அவர் தற்போது டாக்கா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான சிறையில் கைதியாக அடைத்து  வைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில், பேருந்து தாக்குதல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு பிணை கோரி சமீ பத்தில் டாக்கா உயர்நீதிமன்றத் தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 6 மாத இடைக்கால பிணை அளித்து கடந்த 6ஆ-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்தும் அவரை பிணையில் விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த 7-ஆம் தேதி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சையத் மஹ்முத் ஹொசைன் தலைமையிலான 4 நீதிபதி களை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் முன்னர் விசார ணைக்கு வந்தது.

அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், டாக்கா உயர்நீதிமன்றம் முன் னர் அளித்த பிணையை உறு திப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாத அளவில் கலிதா ஜியா(72) மீது மேலும் சில வழக்கு விசாரணைகள் நிலு வையில் உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner