எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ்தானின் 15-ஆவது நாடாளுமன்றம் திங்கள் கிழமை முதல் முறையாகக் கூடியது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர்.

நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலை வருமான இம்ரான் கானும் பதவியேற்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறு வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பிறகு முதல் முறை யாக திங்கள்கிழமை கூடிய நாடாளு மன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலை வர்களுக்கு முந்தைய நாடாளுமன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 329 உறுப்பி னர்கள் பதிவாளர் முன்னிலையில் பத வியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட் டனர்.

இம்ரான் கான் மட்டுமன்றி, முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முசுலிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, புதிய நாடா ளுமன்றத்தின் அவைத் தலைவரும், அவை துணைத் தலைவரும் வரும் புதன்கிழமை (ஆக. 15) தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று முந்தைய நாடாளு மன்ற அவைத் தலைவர் அயாஸ் சாதிக் அறிவித்தார்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தை யொட்டி, விரும்பத் தகாக சம்பவங் களைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மொத்தம் 342 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத் துக்கு ஜூலை 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில், முன் னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஅய்) 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உரு வெடுத்தது.  தற்போது இம்ரானின் பிடிஅய் கட்சிக்கு 158 பேரின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மையை எட்டிப் பிடிக்க இன்னும் அந்த கட்சிக்கு 14 பேரின் ஆதரவு மட்டுமே தேவை என்ற சூழல் உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner