எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ் தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில்  இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர் கள் வேலை செய்து கொண்டி ருந்தனர்.

சுமார் 4 ஆயிரம் அடி ஆழத் தில் அவர்கள் பணியில் இருந்த போது திடீரென்று பூமியின் அடியில் இருந்து பெருமளவில் கசிந்த மீத்தேன் வாயுவினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின் சிறுபகுதி இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 13 தொழிலா ளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோர விபத்தில் பலியான வர்களின் குடும்பத்தாருக்கு  பலு சிஸ்தான் மாகாண தற்காலிக முதல் அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner