எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்கா, ஆக. 15- கலைஞரின் மறைவையொட்டி அமெரிக்காவின் பல நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் மற்ற அமைப்புகள் மரியாதை செய்து வருகின்றனர்.

அரசியல் மற்ற வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக இணைந்து மரி யாதை செய்வது அவரது தமிழ்,தமிழினத் தொண்டின் சிறப்பாக அமைந்தது.

நியூசெர்சி, சிகாகோ, கன்னெக்டிகட், டெக்சாசு,கலிபோர்னியா, வாசிங்டன் என்று பல ஊர்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி யும், செலுத்த ஏற்பாடுகள் செய்தும் தங்கள் நெஞ்சத்தில் நிறைந்துள்ள கலை ஞர் பற்றிய ஆழ்ந்த உணர்வுகளை வடித் தனர்.

அமெரிக்க பெரியார் பன்னாட்ட மைப்பு பல மாநிலத்தவர் கலந்து கொள்ளும் வகையில் கலைஞர் நினை வைப் போற்றி இணைய, தொலைபேசி அஞ்சல் கூட்டம் ஆக. 12 அன்று காலை 11 முதல் 12:30 வரை நிகழ்வை நடத்தியது. பல மாநிலங்களிலிருந்தும், கனடா,  இலண்டன் நகரத்திலிருந்தும் கலந்து கொண்டனர்.

பல்வழி அழைப்பை பன்னாட்டு பெரியார் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் சோம. இளங்கோவன்  துவக்கி, பேச்சாளர்களை ஒருங்கிணைத் தார். இந்த பல்வழி அழைப்பின் மிக முக்கிய பேச்சாளராக கலைஞரின் மருத் துவர் எழிலன் பல அரிய விசயங்களை பகிர்ந்து கொண்டார். முதலில் ஒரு மணித்துளி அமை திக்குப் பின் மருத்துவர் எழிலன் நாக நாதன் தன்னுடைய மாணவப் பருவம் முதல் மருத்துவப் பயணம் வரை அவ ரது தொடர்பு உரையாடல்களை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு ஈழப் பிரச்சினை யில் கலைஞர் இன்னமும் ஏதாவது அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும் என பல மேடைகளில் பேசிய எழிலன், 2013ஆம் ஆண்டு மருத்துவர் கோபால், மருத்துவர் எழிலனை கலைஞரிடம் அனுப்பிய பிறகு கலைஞருக்கும், எழி லனுக்கு உள்ள நட்பு தொடர ஆரம்பிக்கிறது.

கலைஞர் எப்படி மருத்துவரை மதித்துக் கடைபிடித்து நடக்கும் அறிவுள்ள நோயாளியாக இருந்தார் என்று வியந்தார். பின்னர் கலைஞரின் வாழ்க்கைப் பயணத்தில் எதிர் கொண்ட எதிர் நீச்சலையெல்லாம் சுவைபட உணர்ச்சியுடன் கண் கலங்கிச் சொன் னார். அவருடைய கூர்மையான அறி வையும், நினைவாற்றலையும், உழைப் பையும் மருத்துவத் துறை முன்னேற்றத் தில் ஆளும் போதும்,எதிர்க் கட்சியில் இருந்த போதுங்கூடச் செயல் படுத் தினார் என்று வியந்தார். அவரது கொள் கைகள் நிறைவேற, அவரிடமிருந்து நல்ல வற்றைக் கடைப்பிடித்து நாம் அனைவ ரும் உழைக்க வேண்டும் என்றார்.

இரவு நேரங்களில் கலைஞரை பார்க்க செல்லும் பொழுது எல்லாம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றை, தந்தை பெரியாரின் சமூக போராட்டங் களை, அறிஞர் அண்ணாவின் சாதனை களை, கலைஞர் பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு தொடர்ந்து போராடும் பல அரிய செய்திகளை பகிர்ந்து இருக் கிறார். மருத்துவர் எழிலன் பல்வழி அழைப்பில் மிக மிக உணர்ச்சி பொங்க பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின், தமிழகத்தின் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக கலைஞர் வாழ்ந்து இருக்கிறார் என்றார் எழிலன். தமிழகத்தில் எல்லா கிராமங்களுக்கும், பல நகரங்களுக்கு சென்று இருக்கிறார் கலைஞர். பல ஊர்களின் பெயர், அங்கு வசிக்கும் நபர்களை மிகச் சரியாக நினைவில் வைத்து இருப்பார் கலைஞர் என்றார்.

இந்தியத் துணை கண்டத்தை, தமிழ கத்தை நன்கு புரிந்து வைத்து இருந்தார் கலைஞர். இந்திய சட்டத் திட்டத்தை நன்கு புரிந்து வைத்து இருந்தார். நில சீர்திருத்தச் சட்டம், இசுலாமிய பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், மொழியை, இனத்தை பாதுகாக்க என்று தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியவர் கலை ஞர் அவர்கள் என்றார் எழிலன்.

அசோகர் பவுத்தம் பரப்பியது போல, திராவிட சிந்தாந்தத்தை பரப் பியவர் கலைஞர் அவர்கள்.  திராவிட இனத்தின் ஒட்டு மொத்த அடையாளம், சமூக நீதி காத்த வீரன் என்பதால், கலைஞருக்கு மெரினா மறுக்கப்பட்டது. அவரின் இறுதி காலம் வரை அவரை ஆதிக்க சாதி எதிர்த்தது.

எழிலன் மிக முக்கியமான ஒன்றை ஓர் எடுத்துக்காட்டாக பகிர்ந்து கொண் டார். கலைஞர் முதல்வராக இருந்த பொழுது, எழிலன் முதுகலை படித்துக் கொண்டிருந்த காலத்தில் நஞ்சுக் கட்டுப்பாடு வாரியம் கொண்டு வர முயற்சி செய்த பொழுது, கலைஞர் அதற்கு வாரியம் அமைக்க மத்திய சுற்றுப்புற, சுகாதாரத் துறையில் பேசி, நிதி ஒதுக்கி அந்த வாரியம் அமைக்க உதவினார். அப்பொழுது கலைஞர் எழிலனோடு பேசிக் கொண்டு இருந்த பொழுது, பூச்சிக் கொல்லி மட்டும் பாம்புக் கடி மட்டும் சேர்க்கப்பட்டு இருந்தது. கலைஞர் தேள் கடியை சேர்த்துக் கொள்ளும் படி சொன்னராம்! தமிழ் நாட்டில் பூச்சி கடித்து இறந்த வர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது என்றார்.

மருத்துவத்தில் கலைஞரின் பங்கு மிக அதிகம் என்றார் எழிலன். பிறந்த குழந்தைகள் ஜூரம் வந்து இறந்து போவது பென்சிலின் மருந்துகள் மூலம் 34 சதவிகிதம் விதத்தில் இருந்து 1 சதவிகிதம் குறைந்து விட்ட து என்றார். இது ஒரு மகத்தான கலைஞர் அரசின் சாதனை என்றார். தமிழ் சமூகம் கலைஞரை வெறும் குறை மட்டும் சொல்லாமல் அவர் மொழி, கலை, பண்பாடு, சமுதாயத் திற்கு ஆற்றிய பணிகளை எல்லா மக் களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

எழிலனின் நெஞ்சார்ந்த நினைவ லைகளை தொடர்ந்து பலரும் பல முக்கியமான செய்திகளை பகிர்ந்துக் கொண்டார்கள்.

வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் பிரபாகரனின் சகோதரர் 1953இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது, கலைஞர் ரயில் மறியல் போராட்டத்தில் கல்லக்குடியில் போராடி சிறைச் செல்ல காரணமாக இருந்தவர். ஆனால் கலைஞர் 1967இல் முதல்வராக பதவி ஏற்றப் பிறகு மீண் டும் அந்த அதிகாரி சந்தித்த பொழுது, நான் என் வேலையை தொடருகிறேன், நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள் என்றாராம் கலைஞர்.  இதனை முனை வர் பிரபாகரன் பகிர்ந்துக் கொண்டார்.

தன்னை கல்லக்குடி போராட்டத்தில் தண்டித்தவரே பின்னாளில் செயலராக வந்தபோது நேர்மையாக கடமையை செய்தவரின் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று கூறியது அவருடைய பெருந்தன்மையை காட்டியது.

பேரவை தலைவர் சுந்தர் குப்பு சாமி கலைஞரின் கலை, பண்பாடு, சமுதாய மாற்றம் கொஞ்சம்நஞ்சமல்ல என்றார்.

பேரவை முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர், கலைஞர் வாழ்க்கை முழுவதுமே போராட்டமே என்றார். குறிப்பாக ஈழப் போர் தோல்வி அடைந்ததற்கு உள்நாட்டு யுத்தமே காரணம், அங்குள்ள போராளிகள் காரணமாக, ஆனால் அந்தப் பழியை கூட கலைஞர் சுமந்தார், அதில் இருந்து மீண்டு வந்தார் கலைஞர் என்றார்.

லண்டனில் இருந்து சுவாமி கண் ணன், கலைஞர் மாபெரும் திராவிட பிம்பம், ஆனால் அதோடு விட்டு விடாமல், அவர் செய்த பணிகளை நாம் அனைவரும் தொடர வேண்டும் என்றார்.

ப்ளோரிடாவில் இருந்து கோபிநாத் என்ற இளைஞர் கலைஞரின் தமிழ் மேல் இருந்த ஆர்வத்தால் அவரை நான் நேசித்தேன் எனவும், கலைஞரின் இட ஓதுக்கீடு திட்டத்தால் எண்ணற்ற மாண வர்கள் பலன் பெற்றதை சொல்லி மனதார கலைஞருக்கு நன்றி சொன்னார்.

ஈழத்து மகளிர் புஷ்பராணி வில் லிமஸ், கடந்த இரண்டு வாரங்களில் கலைஞர் தமிழ் சமுதாயத்திற்கு செய்த அரும் பணிகளை நிறைய படித்தும், இணையத்தில் பார்த்தும் தெரிந்து கொண்டேன் என்றார். மருத்துவர் சோம. இளங்கோவன் அவருடைய நகைச்சுவை, அவருக்கு மிகவும் வேண்டிய சேது கால்வாய் திட்டத்தின் போது ஒரு சாமியார் தலையை சீவி விடுவேன்என்றதற்கு நான் சீவியே பல ஆண்டுகள் ஆகிவிட் டது! என்று நயம்படக் கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.

கலைஞருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்கள்  என்னென்ன என்பதையும் வரிசைப்படுத்தினார்.

1. அவரது கொள்கைகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல். நல்ல நூல்கள், இணைய வெளியீடுகள் என்று செயல் படுதல்.

2. மாநில அரசு கல்வி, பொருளாதார உரிமைகளை மீட்டெடுத்தல்

3. இட ஒதுக்கீட்டை ஒழுங்காக்கச் செய்தல், தனி நிறுவனங்களிலும் கொண்டு வருதல்

4. வரும் பேரிடரை உணர்ந்து தமிழினம் ஒன்று பட்டு தமிழ்நாட்டில் நல்லாட்சி, தமிழ் ,தமிழர்கள் முன்னேற் றம் என்பதில் அனைவரும் உழைத்து, விவசாயம், இயற்கை வளம், நல்ல தொழில் வளர்ச்சி என்பதில் ஈடுபட வேண்டும்.

5. சாதி ஒழிந்த சமத்துவத் தமிழகம் காணுதல். பெரியார், அண்ணா கனவு களை நிறைவேற்றல்.

வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர், பேரவை முன்னாள் செயலர் மயிலாடுதுறை சிவா, கலைஞரின் சாத னைகளை, அவர் செய்த அரும் பணி களை நாம் தொடர்ந்து இணையத்தில் பதிய வைக்க வேண்டும் என சொல்லி, பெரியார் பன்னாட்டு மய்யம் இந்த கலைஞர் நினைவேந்தலில் கலந்து கொண்ட அனைத்து தமிழ் அன்பர்களுக் கும் நன்றிகளை காணிக்கை ஆக்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner