எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஆக. 15- கலைஞர் அவர் களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை லண்டன் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' ஒருங் கிணைத்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கே கலந்துகொண்டு கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

த.மு.க தலைவர் நாகதேவன், செயலாளர் அன்பழகன், பாதுகாப்பு மன்றத் தலைவர் தேவதாஸ், த.மு.க திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவமணி மனோகரன் ஆகியோர் கலைஞரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் பால் சத்தியநேசன், மற்றும் முருகானந்தன் ஆகியோர் கலைஞர் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

அனைவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தும், கலைஞர் அவர்களுக்கு மலர் களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இயற்கை எய்தியதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறோம். தந்தை பெரி யாரின் சீடராக, அண்ணாவின் தம்பியாக வலம் வந்த கலைஞர், தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். கலைஞர் அவர்களை இழந்து வாடும் தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் கலை ஞரின் குடும்பத்தினர் அனை வருக்கும் இந்த நேரத்தில் இலண்டன் 'தமிழர் முன் னேற்றக் கழகம்' சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்தும் மறையாத மானமிகு சுய மரியாதைக்காரர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner