எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரோம், ஆக. 16- இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலை களுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற் றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடை யில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள கி10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது.

அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்களும் லாரிகளும் இடிபாடு களுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த விபத்தில் எதுவும் உயிர் சேதம் ஏற்பட்டதா என்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. எனி னும், பத்துக்கும் அதிகமானோர் இந்த விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது.

ஆப்கானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 காவல்துறையினர் பலி

காபுல், ஆக. 16- ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், காவல்துறையினர் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களை எதிர்த்து அரசுப் படைகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதல் களில் பயங்கரவாதிகளும், அவர்களது படைகளும் தகர்க்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கர வாதிகள் எதிர்பாராத விதமாக நடத்திய தாக்குதலில் 7 காவல்துறையினர்  வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கர வாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner