எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அங்காரா, ஆக. 16- அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் மீது அமெ ரிக்கா விதித்துள்ள பொருளா தாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதி கரித்துள்ளதாகக் கூறப்படு கிறது.

இதுகுறித்து துருக்கி தொலைக் காட்சிகளில் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான உரையில் எர் டோகன் கூறியதாவது:

துருக்கியின் பொருளாதா ரத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் அமெரிக்கா விதித் துள்ள தடைகளுக்குப் பதிலடி யாக, அவர்களது மின்னணு பொருள்களை நாம் புறக்கணிப் போம்.

அமெரிக்காவிடம் அய் போன்கள் இருக்கிறது என்றால், அதற்கு மாற்றாக தென் கொரி யாவின் சாம்சங் போனைப் பயன்படுத்தலாம்.

அது போதாதென்று, உள் நாட்டு செல்லிடப் பேசித் தயா ரிப்பாளர்களான வீனஸ், வெஸ் டல் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

துருக்கியின் பொருளாதாரத் துக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப் படுகிறது. எனினும், அதற்கு அஞ்சி அமெரிக்காவிடம் துருக்கி ஒருபோதும் பணியாது.

நடப்புக் கணக்குப் பற் றாக்குறை அதிகரித்து வருவது, பணவீக்கம் ஆகிய பிரச்சினை களை துருக்கி சந்தித்து வருவது உண்மைதான்.

எனினும், அந்தப் பிரச்சி னைகளைக் களைய மும்முர மான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் எர்டோகன்.

துருக்கியிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளதாக அதி பர் டிரம்ப் கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்தார்.

இதையடுத்து, துருக்கி பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற் பட்டு, அந்த நாட்டு கரன்சியான லிராவின் மதிப்பு சரிந்தது.

அதனைத் தொடர்ந்து, பொருளாதாரத் தடைகள் மூலம் தங்கள் நாட்டை அமெ ரிக்கா மிரட்டுவதாக துருக்கி குற்றம் சாட்டியது.

பொருளாதாரத் தடைகள் மூலம் பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பழக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டு வராவிட்டால், பிற நாடுகளுடன் இணைந்து அமெ ரிக்காவை வழிக்குக் கொண்டு வரப் போவதாக துருக்கி வெளி யுறவுத் துறை அமைச்சர் முக மது ஜாவத் ஸரீஃப் எச்சரித் திருந்தார்.

இந்தச் சூழலில்தான், அமெ ரிக்க மின்னணுப் பொருள்க ளைப் புறக்கணிப்பதாக எர் டோகன் அறிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner