எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஆக. 16- உலக தத்துவ காங்கிரசு மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. உலக தத்துவ காங்கிரசு மாநாடு முதன்முதலில் 1900-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடை பெற்றது.

உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தத்துவ நிகழ்வு களில் ஒன்றாக இது திகழ்கிறது. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பெய்ஜிங்கில் நடப்பது இதுவே முதல் முறை. இம்மாநாட்டில் மனிதனாக கற்றுக் கொள்ளுதல் என்ற பொருளிலில் சொற்பொழிவுகள், விரிவுரைகள் மற்றும் சுற்றுச் சூழல்கள் போன்ற 100-க்கும் அதிகமான கருத்தரங்குகள் நடை பெற உள்ளன.

121 நாடுகளிலும், பிராந்தியங்களிலிலுமிருந்து 6,000-க்கும் மேற்பட்ட தத்துவ மேதைகள் மற்றும் கல்வியாளர் கள் இதில் கலந்து கொண்டுள் ளனர். இந்நிகழ்வில் பல்வேறு கலந்துரையாடல்கள் மூலம்  தத்துவ எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, உலக நாகரிகம் மற்றும் எதிர்காலத்தில் மனிதர் கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட உள்ளது. மேலும் சீன தத்துவத்திற்கும் உலகின் பிற பாகங்களிலிருக்கும் தத்துவங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவ தற்கும், ஒருமித்த கருத்தைத் தேடுவதற்கும், சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையி லான இடைவெளியை நீக்குவ தற்கும் இந்த உலக தத்துவ காங் கிரசு மாநாடு - 2018 உதவும் என்று சீன அமைப்புக் குழுவின் தலை வர் லின் ஜியானுவா நம்பிக்கை தெரிவித்தார்.

தத்துவ சங்கங்களின் சர்வ தேச கூட்டமைப்பு மற்றும் பீக் கிங் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இம்மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner