எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

லண்டன், ஆக. 17- வெண்கலத் தால் ஆன 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 14 புத்தர் சிலைகள் பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக் கப்பட்டு வந்தது. இந்த சிலை கள் 1961ஆ-ம் ஆண்டு திருட்டுப் போனது.

இந்த சிலைகளில் ஒரு புத் தர் சிலை மட்டும் பல கைகள் மாறி இறுதியில் லண்டனில் உள்ள கலை மற்றும் பழம் பொருட்கள் கூடத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏலத் துக்கு விடப்பட இருந்தது. இந்த சிலை இந்தியாவிலிருந்து திருடப்பட்டது என்பது அறி யாமலேயே அது ஏலத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, இங்கி லாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு காவல்துறையின ரும், இந்தியா பிரைட் புரா ஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவ ரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை கடந்த மார்ச் மாதம்  உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த சிலையை இந்தியாவுக்கு மீட் டுக் கொண்டு வரும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இந்த சிலையை லண் டன் நகரின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் சட்டரீதி யாக மீட்டனர்.

இந்த புத்தர் சிலை லண்ட னில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின்போது முறைப்படி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின் காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner