எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

நியூயார்க், ஆக. 17- அமெரிக்கா வின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் எதான் சோனே பார்ன். இவன் பள்ளியில் படித்து வருகிறார். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஆனால் வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை சகஜ மாக எடுத்துக் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்தலில் போட்டியி டுவதற்கான சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டன. அதன்படி இங்கு போட்டியிட வயது வரம்பு தேவையில்லை. வெர் மோண்ட் மாகாணத்தில் 4 ஆண்டுகள் குடியிருந்தால் மட் டும் போதும்.

தேர்தலில் போட்டியிடும் எதான் தீவிர தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபட்டு இருக்கிறார். இணையதளம் மூலம் பிரச்சா ரம் மேற்கொண்டு வருகிறார்.

சுகாதார மேம்பாட்டு சீர மைப்பு, பொருளாதாரம் மற் றும் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவ தாக உறுதியளித்து இருக்கிறார்.

இவனை எதிர்த்து கிறிஸ் டினே ஹாஸ்குவஸ் என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner