எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஆக. 18- வெடிகுண்டு களை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன் படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன் படுத்தலாம் என்று கண்டுபிடித் திருக்கிறார்கள். நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண் டுகளை கண்டுபிடிப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடி குண்டுகளை கண்டு பிடிப்ப தற்கு பயிற்சி நடந்து வந்தது. அதில் நல்ல பயன் கிடைத்ததை யடுத்து இப்போது 9 கீரிகளை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். அதில் 2 கீரிகளுக்கு பணிகள் வழங்கப்பட்டு வெடிகுண்டு களை கண்டுபிடிக்க அனுப்பப் பட்டு வருகிறது. மற்ற 7 கீரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ராணுவ மேஜர் சுபுன்ஹேரத் கூறியதா வது:-

வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் மோப்ப நாய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகின்றன. அவை குளிர்பிரதேசத்தில் வளரும் நாய்கள் ஆகும். அவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து பராமரிப்பது மிகவும் கடின மாக இருக்கிறது. மேலும் இதன் செலவும் அதிகமாகிறது.

எனவே தான் மோப்ப சக்தி அதிகம் கொண்ட கீரியை இதற்கு பயன்படுத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டோம். இது சிறப்பான பலனை கொடுத் துள்ளது. நாயை விட கீரிதான் நன்றாக செயல்படுகிறது. நாயை, பொருத்தவரை தனது தலைக்கு கீழ் உள்ள வெடி குண்டுகளையே மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் கீரிகளால் தரைப்பகுதி மட்டும் அல்லாமல் தனது தலைக்கு மேலே உள்ள வெடி குண்டுகளையும் கண்டுபிடிக்க முடிகிறது. வெடிகுண்டுகளை கண்டுபிடித்ததும் அதை தோண்டி எடுப்பதற்கு பயிற்சி அளித்தோம். அதனால் கீரிகள் பாதிக்கப்படுவதால் இப்போது அதை தகவல் சொல்ல மட் டுமே பயன்படுத்துகிறோம்.

ஒரு இடத்தில் வெடிகுண்டு இருப்பது தெரிந்தால் அந்த இடத்திற்கு சென்று கீரி அமர்ந்து கொள்ளும் அதை வைத்து எளிதாக வெடிகுண்டு களை அகற்றி விடலாம்.

இலங்கையில் 3 வீதமான கீரிகள் உள்ளன. அதில் சாம் பல் நிற கீரி நன்றாக மோப்பம் பிடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner