எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், ஆக. 18- ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப கால மாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத் தத் தொடங்கி உள்ளனர். இந்த ஆண் டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

கடைசியாக நேற்று முன்தினம் காபூ லில் உள்ள தனியார் பயிற்சி மய்யம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக் குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட் டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். பயங்கர வாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

இப்படி கல்வி நிறுவனங்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருவது மக்களி டையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அங்கு நாடு முழு வதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பாது காப்பு காரணங்களையொட்டி அவை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. இதுபற்றி ஆப்கானிஸ் தான் உள்துறை அமைச்சர் வாயிஸ் அகமது பர்மாக் கூறும்போது, கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இப்போது நமது நாடு சந்தித்து வருகிற மிக பயங்கரமான தாக்குதல்கள் என்றுதான் கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner