எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்க தலைநகர் வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் வீர வணக்க நிகழ்வு கிரேட் பால்ஸ் நூலக கருத்தரங்க அறையில் 18.8.2018 அன்று மாலை 5 மணிக்கு, வட்டார தமிழ்ச்சங்க தலைவர் இராஜாராம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் நினைவுரையாற்றினார் மற்றும்  வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், வட்டார தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, எம்.பி.சிவா (மயிலாடுதுறை) மேரிலேண்ட் கவிஞர் செண்பகப் பாண்டியன், தமிழ்ச்சங்க முன்னோடி குழந்தைவேல் ராமசாமி ஆகியோர் பேசினர். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்தினர். அனைவரும் புகழாரம் சூட்டினர். மலர் தூவி மரியாதையும் செலுத்தினர். இறுதியாக வட்டார தமிழ்ச் சங்க செயலாளர் இரா. அறிவுமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner