எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 11.8.2018 சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு கண்ணீர் மரியாதையாக இல்லாமல்  'ஸிணிவிணிவிஙிணிஸிமிழிநி ரிகிலிகிமிநிழிகிஸி' 'சகாப்தங்கள் மறைவதில்லை' என்ற தலைப்பில் திமுக தலைவர் அவர்களின் வாழ்வை நினைவு கூரும் விழாவாகவே நடைபெற்றது. கலைஞர் தமிழுக்கு செய்த தொண்டினை விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுதே உணர முடிந்தது.

உடலால் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் உணர் விலும்,  உயிரிலும் கலந்திருக்கும் திமுக தலைவரின் சாதனை களையும், அவரால் தங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினர். சமூக நீதி தளத்தில் அவர் ஏற்படுத்திய அரசியல் புரட்சி பற்றியும் ஆட்சி அதிகாரம் மூலம் கல்வி மற்றும் தொழிற்துறையில் அவர் ஏற்படுத்திய மறுமலர்ச்சி பற்றியும் தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் பேசினர். கலைஞரை நேரடியாக சந்தித்தவர்கள், அவர் நலத்திட்டங்களின் உதவி யால் உயர்கல்வி பெற்றவர்கள், அவருடைய எழுத்தால் அவர் மீது அன்பு கொண்டவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், தங்களின் பாசமிகு வழிகாட்டியின் இறுதி பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் இந்நிகழ்வு ஒரு நன்றி தெரிவிக்கும் ஏற்பாடாகவே தோன்றியது.

தமிழக, இந்திய வரலாற்றில் பல ஆளு மைகளுக்கு இரங்கற்பா எழுதிய கலைஞருக்கு தோழர்கள் இரங்கல் கவிதை படித்து தங்கள் தமிழாசானை நினைவு கூர்ந்தனர்.

தகவல்: அருள்பாலு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner