எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், ஆக 21 ஆப்கானிஸ்தானில் பேருந்தில் பயணித்த பெண்கள், குழந் தைகள் உள்பட 100 பேரை தலீபான் தீவிர வாதிகள் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து சென்றனர்.   ஆப்கானிஸ்  தானில் அதிபர் அஷ்ரப் கனி தலை மையிலான அரசு ஈத் பண்டிகையையொட்டி தலீபான்களுடன் நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் இருந்து 3 பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவர்களை தலீபான் தீவிரவாதிகள் கான் அபாத் அருகே சாலையில் வைத்து வழிமறித்தனர்.  பின்னர் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்கச் செய்து தங்களுடன் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.

அவர்கள் அனைவரும் படாக்ஷன் மற்றும் தக்வார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் காபூல் நோக்கி பேருந்துகளில் சென்றுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 17 வருட போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என தீவிரவாத தலைவர் மவுலவி அய்பதுல்லா கூறியிருந்த நிலையில் தீவிரவாதி கள் பிணைக் கைதிகளாக பொதுமக்களை பிடித்து சென்றுள்ளனர்.  ஆனால் அவர்களை எங்கு கொண்டு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரு நதிகள் வெவ்வேறு நிறங்களில் கடலில் கலப்பதால் சீனாவில் மக்கள் மகிழ்ச்சி

சீனா, ஆக.21 சீனாவில் இரு நதிகள் வெவ்வேறு நிறங்களில் கடலில் கலப்பதால் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். சோங்கிங் என்ற இடத்தில் சியாலிங், யாங்சே ஆகிய இரு ஆறுகள் கடலில் கலக்கின்றது. இந்த இரு ஆறுகளும் வெவ்வேறு நிறங்களில் ஒன்று சேருகின்றது. இதில் யாங்சே ஆறு பச்சை நிறமாகவும் சியாலிங் ஆறு செந்நிறமாகவும் ஒன்றி ணைகின்றது.

பின்னர் இரு நதிகளும் கடலில் சேரும் போது கரும்பச்சை நிறத்தில் சேருகின்றது. இந்த அதிசயத்தை நாள்தோறும் ஏராளமா னோர் கண்டுகளித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner