எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பமாக்கோ, ஆக. 22- தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப் பிரிக்க நாடான மாலியில் அதி பர் பதவிக்கு நடைபெற்ற தேர் தலில் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக மந்தமான வாக் குகளே பதிவாகின.

தேர்தல் வன்முறை சம்ப வங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட் டின் பல பகுதிகளில் 644 வாக் குச்சாவடிகளை (சுமார் 3 சத வீதம்) பயங்கராவாதிகள் கைப் பற்றி கொண்டதால் ஒட்டு மொத்த வாக்காளர்கள் எண்ணிக் கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந் தன.

பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்ட்டா 41.4 சதவீதமும் அவரை எதிர்த்து களமிறங்கிய சவுமைலா சிஸ்சே 17.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ள னர். அதிபராவதற்கு பெற வேண் டிய அதிகபட்ச அளவான 50 சதவீதம் வாக்குகளை இருவ ரும் பெறாததால் விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டிய நெருக் கடி ஏற்பட்டது.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடை பெற்ற இரண்டாம் சுற்று தேர்த லில்  இப்ராகிம் பவுபக்கர் கெய்ட் டாவுக்கு 67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தல் முடிவை ஏற்றுகொள்ள மறுத்த எதிரணி வேட்பாளர் சவுமைலா சிஸ்சே அந்நாட்டின் அரசியல மைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேற்று  தீர்ப்பளித்த நீதிபதி,  இப்ராகிம் பவுபக்கர் கெய்ட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு செல் லும் என தீர்ப்பளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner