எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

இசுலாமாபாத், ஆக. 22- பாகிஸ் தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந் தது. எனவே, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

இசுலாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு அதிபர் மம்னூன் உசேன் பத விப்பிரமாணம் செய்து வைத் தார். அதன்பின்னர் 21 பேர் அடங்கிய தனது அமைச்சர வையை இம்ரான் கான் அறிவித்தார். இதில் 16 பேர் மத்திய அமைச்சர்கள்; 5 பேர் பிரதம ரின் ஆலோசகர்கள்,  பாகிஸ் தான் பாதுகாப்புத் துறை அமைச் சராக பர்வேஸ் கட்டாக், நிதி அமைச்சராக ஆசாத் உமர் மற் றும் வெளியுறவுத்துறை அமைச் சராக ஷா மெஹ்முது குரேசி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இம்ரான் கான் தலைமையிலான அமைச் சரவை பதவியேற்பு விழா நேற்று அதிபர் மாளிகையில் நடைபெற்றது. இம்ரான் கான் முன்னிலையில் புதிய அமைச் சர்களுக்கு அதிபர் மம்னூன் உசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலா னவர்கள் முஷாரப் ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்பு களை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner