எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிங்கப்பூர், ஆக. 23- வன் முறைக்கு அஞ்சி மியான்மாவி லிருந்து வெளியேறியுள்ள சிறு பான்மை ரோகிங்யா அகதிகள் எப்போது நாடு திரும்புவார்கள் என்பது, அவர்களுக்கு அடைக் கலம் கொடுத்துள்ள வங்க தேசம் அளிக்கும் ஒத்துழைப் பைப் பொருத்தது’ என்று மியான்மா அரசின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் 4 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இதுகுறித்து அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இவ் வாறு தெரிவித்தார்.

மியான்மாவின் ராக்கைன் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் ரோகிங்யா இனத்தவர்கள், ராணுவம் மற்றும் பவுத்த மதவாதக் கும்பல்களின் வன்முறைக்கு அஞ்சி, அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தது நினைவுகூரத்தக்கது.


எல்லை ராணுவ நிலைகளை மூட கொரிய நாடுகள் முடிவ

சியோல், ஆக. 23- தங்கள் நாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தங்களது சில ராணுவ நிலைகளை மூட வட கொரியாவும், தென் கொரியாவும் முடிவு செய்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற கொரியப் போர் முடிவுக்கு வந்த 1953-ஆம் ஆண்டிலிருந்து, இரு நாடு களும் எல்லைப் பகுதியில் மிகப் பலம் வாய்ந்த ராணுவ நிலைகளை அமைத்துள்ளன. எனினும், அண்மைக் காலமாக இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக் கும் முயற்சியில் ஈடுபட்டு, பல்வேறு நல்லெண்ண நடவடிக் கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சுமார் 10 எல்லைக் காவல் நிலை களை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner