எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக. 23- பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரை அமைதிக்கான தூதர் என்று பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் புகழ்ந்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இசுலாமாபாதில் நடைபெற்ற இம்ரான்கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி க்வாமர் ஜாவீத் பாஜ்வாவும், சித்துவும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதுபோல், பாகிஸ்தான் தளபதியை சித்து ஆரத்தழுவி யதை முன்வைத்து அவருக்கு எதிராக கடுமையான குற்றச் சாட்டுகளை பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட் சிகள் தெரிவித்து வருகின்றன. முதல்வர் அமரீந்தர் சிங்கும், சித்துவுக்கு எதிராக அதிருப் தியை வெளியிட்டிருந்தார். இத னால் சித்து கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், சுட்டுரை யில் சித்துவுக்கு ஆதரவாக இம் ரான் கான் செவ்வாய்க்கிழமை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்ப தாவது:

எனது பதவியேற்பு நிகழ்ச் சியில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்ததற்காக சித்துவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் அமைதிக் கான தூதர் ஆவார். அன்புள்ளம் கொண்டவர். அவரை பாகிஸ் தான் மக்கள் மிகவும் நேசிக் கின்றனர்.

சித்துவை இந்தியாவில் விமர்சிக்கும் நபர்கள், தெற்கா சிய துணைக் கண்ட அமை திக்கு எதிராக செயல்படுகின் றனர். அமைதி இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.

இந்தியாவும், பாகிஸ்தா னும் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து தகராறுகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

தெற்காசிய துணைக் கண் டத்தில் நிலவும் வறுமையை ஒழிக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், இரு நாடுகளும் தங்களுக்கு இடை யேயான கருத்து வேறுபாடு களுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண் டும். இரு நாடுகள் இடையே வர்த்தகம் தொடங்க வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் இம் ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner