எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரபாட், ஆக. 23- வடமேற்கு ஆப் பிரிக்கா கண்டத்தில் அமைந் துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடை பெற்று வருகிறது. அரசு மற் றும் முப்படைகளின் தலைவ ராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத் தில் இரு அவைகள் உள்ளன.

நாடாளுமன்றத்துக்கு மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிர தமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.

சுமார் மூன்றரை கோடி மக் கள் வாழ்ந்துவரும் மொராக் கோவின் முதன்மை மதமாக இசுலாம் உள்ளது. மக்கள் தொகையில் பெரும்பான்மை யானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

அந்நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை கேட்டு வலியுறுத்தி சமீபகாலமாக போராட்டங்கள் பெருகி வரு கின்றன. இது மன்னருக்கு எதிரான புரட்சியில் முடியலாம் என அந்நாட்டு அரசியல் விமர் சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், போராட்ட உணர்வுகளை குறைப்பதற்கும், நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்க ளுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிய வைக்க வும் 19 முதல் 25 வயதுக்கு இடையிலான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் சட்ட முன் வரைவுக்கு மொராக்கோ அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner