எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வியன்னா, ஆக. 23- வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் கைவிடப்பட் டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சர்வதேச அணு ஆயுதக் கண்கா ணிப்பு அமைப்பு (அய்ஏஇஏ) தெரிவித் துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை அய்ஏஇஏ அமைப்பு பெற்றிருக்கவில்லை.

அந்த நாட்டின் அணு சக்தி நட வடிக்கைகள் குறித்த மிகக் குறைவான தகவல்களே எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. எனினும், செயற்கைக் கோள் புகைப்படங்கள் போன்ற வெளிப்படையான தகவல்களின் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் தீவி ரமாகக் கண்காணித்து வருகிறோம்.

எங்களது ஆய்வில், வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்திவிட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அணு ஆயுதங்கள் தயாரிக்கும் தனது நடவடிக்கைகளைக் கைவிடாமல், அதற்கு நேர்மாறான அறிக்கைகளை வட கொரியா வெளியிட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner