எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஆக. 24- இந்தியா -- பாகிஸ்தான் உறவை வலுப் படுத்த உதவி செய்யத் தயா ராய் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங் குவது குறித்து இந்தியப் பிர தமர் நரேந்திர மோடி, பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துகளை வரவேற்பதாக வும் சீனா குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில், அந்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதேபோல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தா னும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்தியா, -பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தொடங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர் களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெளியிட்டிருந்த சாதகமான கருத்து களை சீனா தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்தக் கருத்துகளை சீனா வரவேற்கிறது.

தெற்காசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகவும் முக்கியமான நாடுகளாகும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா வுக்கு மிகவும் நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை வாயிலாக தங்களிடையேயான  புரிந்துணர்வை அதிகரிப்பதை சீனா உறுதியாக ஆதரிக்கிறது. அதேபோல், இரு நாடுகளும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் சீனா ஆதரிக்கிறது. தெற்காசிய பிராந்திய வளர்ச்சி, அமைதி ஆகிய வற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக உறுதிபூண்டு உள்ளன என்று சீனா நம்புகிறது. இந்த நோக்கத்துக்காக சீனா ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபட விரும்புகிறது என்றார் அவர். அப்போது லூ ஹாங்கிடம், ஆக்கப்பூர்வமான பணி என்பதை இந்தியா-, பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப் படும் நடுநிலை சமாதானம் என்ற அர்த்தம் கொள்ளலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

சாத்தியமிருந்தால், சீனா ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பணியில் ஈடுபட விரும்புகிறது. நடுநிலை சமாதானமா என் பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது. தக்க நேரத்தில், தக்க சூழ்நிலையில், சீனா தனது பணியை மேற் கொள்ளும் என்றார் லூ காங்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner