எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜெனீவா, ஆக. 24- பயங்கரவா தத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சர்வதேச அளவில் ஆத ரவு தேவை என்று அய்.நா. பொதுச் செயலர் அன்டோ னியோ குட்டெரெஸ் கூறினார்.

பாக்தாத் நகரில் உள்ள அய்.நா. வளாகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் நினைவாக, ஆகஸ்ட் 21-ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களை ஆதரிக்கும் தின மாக கடைப்பிடிப்பதற்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற அய்.நா. பொதுச் சபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், முதலாம் ஆண்டு தினத்தையொட்டி, அய்.நா. பொதுச் செயலர் அன்டோ னியோ குட்டெரெஸ் கூறியதா வது:

பயங்கரவாதம், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற் படுத்தி வருகிறது. இதில், அய்.நா. கூட விட்டு வைக் கப்படவில்லை. அய்.நா.வும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.

தஜிகிஸ்தான் முதல் பிரிட் டன் வரை, பாக்தாத் முதல் பார்சிலோனா வரை பயங்கர வாதத்தின் தாக்குதல்கள் நம்மை உலுக்கியிருக்கின்றன. பயங்கரவாத தாக்குதல் நடைபெறாத நாடே இல்லை என்று கூறலாம். பெரும்பா லான நாடுகள் பாதிக்கப்பட்டி ருந்தாலும், ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா, சோமா லியா, சிரியா ஆகிய நாடுக ளில்தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். பயங்கர வாதத் தாக்குதலுக்குப் பலர் பலியாகியுள்ளனர். ஏராளமா னோர் காயமடைந்துள்ளனர். பலர் தங்களுடைய உறவினர் களையும், நண்பர்களையும் இழந்துள்ளனர்.

தினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சாமானியர்களின் வாழ்க்கை, பயங்கரவாதத் தாக் குதலுக்குப் பிறகு முற்றிலும் நிலைகுலைந்து விடுகிறது அல்லது திசை மாறிவிடுகிறது. எனவே, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வேதச அளவில் ஆதரவு தேவைப்படுகிறது. எஞ்சியி ருக்கும் வாழ்வை பெரும் சுமை யோடு கழிக்கிறார்கள்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவற்றைப் பாதுகாக்கும் வகை யில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவது மிகவும் அவ சியமாகும். எனவே, அவர்க ளுக்கு நீண்டகால உதவி தேவைப்படுகிறது. அவர்க ளுக்கு சட்ட ரீதியாக, மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக உதவி தேவைப்படுகிறது. அவர் களின் குரல்கள், பயங்கரவாதச் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner