எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிட்னி, ஆக. 25- ஆஸ்திரேலியா வில் சமீபகாலமாக அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்து வரு கிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற் பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வரு கின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரத மராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட் சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற் பட்டது. உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனால் மீண்டும் ஓட்டெ டுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற் பட்டது.

அதில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிட வில்லை. வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிர தமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ் திரேலியாவின்  பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற் றார்.

ஆஸ்திரேலியாவில் வருகிற 2019ஆ-ம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவிவகிப் பார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner