எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக.26 அமெரிக்காவில் உலக பேச்சு வாகையர்  பட்டப் போட்டி 1938ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் நியூயார்க் நகரத்தின் சார்பில், தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நியூயார்க் நகரத்தின் சார்பில் இந்த போட்டியில்  பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெயர் டாக்டர் ஹில் கிருஷ்ணனுக்கு கிடைத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள சிகாகோ நகரில் நடந்த அரை இறுதி போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணனுக்கு 2ஆவது பரிசு கிடைத்தது. இவர் ஆஸ்திரேலியா, நைஜீரியா, சிங்கப்பூர், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த பேச்சாளர்களுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

இவர் நெல்லை மாவட்டம், வடுகச்சிமதில் கிராமத்தை சேர்ந்தவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, பின்னர் நியூயார்க் சென்று அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து எம்.எஸ். பட்டம் பெற்றார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்று உள்ளார். தற்போது  நியூயார்க் நகரில் பரூச் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப் பிடத்தக்கது.

இந்தோனேசியா: நிலநடுக்க பலி 555-ஆக உயர்வு

ஜகார்த்தா, ஆக.26 இந் தோனேசியாவின் லொம்போக் தீவில் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட தொடர் நிலநடுக் கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555-ஆக உயர்ந் துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

அந்த நாட்டின் சுற்றுலாத் தீவான லொம்போக்கில், கடந்த மாதம் 29-ஆம் தேதி மற்றும் இந்த மாதம் 5-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து பல நில நடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner