எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், ஆக.26  கொரியப் போர் காரணமாக சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த குடும்ப உறவினர்கள் சந்தித்துக் கொள்ளும் உணர்வுபூர்வமான நிகழ்ச்சியின் இரண்டாவது சுற்று, வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்பதற்காக, 300-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தென் கொரியாவிலிருந்து வட கொரியாவின் டயமன்ட் மவுன் டெய்ன் சுற்றுலா விடுதிக்கு வந்தனர். மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்ச்சியில், அவர்கள் தங்கள் உறவினர்களைச் சந்திக்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வாரம் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சி, தற்போது இரண்டாவது சுற்றாக நடைபெறுகிறது.

கடந்த 1950 முதல் 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போரில், ஒரே குடும்பத் தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வர்கள் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பிரிக்கப்பட்டனர்.

எல்லையின் இருபுறங் களிலும் உள்ள உறவினர்களி டையே தொடர்புகள் முழுமை யாக தடுக்கப்பட்டதால் தங்களது குடும்ப உறுப்பினர்களைச் சந் திக்க முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர்.  அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்புக்குரியவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமலே மறைந்தனர். எனினும், அவ்வப் போது இரு கொரிய நாடுகளும் நடத்திய சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது தேர்ந்தெடுக் கப்பட்ட ஒரு சிலர் மட்டும் தங்களது குடும் பத்தினரை சந்தித்து வந்தனர்.

வட கொரியா மேற்கொண்டு வந்த ஆயுத சோதனைகளும், அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மேற்கொண்டு வந்த போர் ஒத்திகையும் இரு நாடுகளுக்கிடையிலான பதற் றத்தை அதிகரித்து வந்தது.

இதையடுத்து, போரால் பிரிந்த குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்ச்சிகள் கடந்த 2015-ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், இரு கொரிய நாடுகளுக்கும் இடையே இணக் கம் ஏற்பட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் நடைபெறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner