எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிங்கப்பூர், ஆக.26  மருத்துவக் காப்பீடு கோரும் முறையில் தொழில்நுட்ப ரீதியாக புதிய யோசனையை முன்வைத்ததற்காக, சிங்கப்பூரில் படிக்கும் இந்திய மாணவர்கள் மூவர் புதிய தொழில்முனைவோர் விருது பெற்றுள்ளனர்.

புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கத்தோடு, சிங்கப்பூரில் உள்ள எஸ்.பி. ஜெயின் கல்லூரி மற்றும் “ப்ளைவயர்’ என்ற பணப் பரிவர்த்தனைக் குழுமம் ஆகிய இருவரும் இணைந்து போட்டி நடத்தினர்.

இந்த போட்டியில், சிங்கப்பூரில் உள்ள பல பல்கலைக் கழகங்களில் இருந்தும் 20 குழுக்கள் கலந்து கொண்டனர். அதில் எஸ்.பி ஜெயின் கல்லூரியில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் படிக்கும் இந்திய மாணவர்கள் அக்ஷய் குப்தா, விநாயக், சச்சின் சஞ்சீவ் ஆகிய 3 பேரும் இணைந்து, மருத்துவ காப்பீடு கோரும் முறையில், ஆவணங்களை தானியங்கி முறையில் அளிக்கும் வகையில் புதிய யோசனையை முன் வைத்ததற்காக புதிய தொழில்முனைவோர் விருது பெற்றனர். அவர்களுக்கு பரிசாக 10, 000 சிங்கப்பூர் டாலர்(ரூ. 5 லட்சம்) அளிக்கப்பட்டது.

இந்த திட்டம் நோயாளிகள் மற்றும் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் என அனைவருக்கும் உதவும் வகையில் இருக்கும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு சிறை

சியோல், ஆக.26 ஊழல் வழக்கில் சிறை யில் அடைக்கப் பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூ-ஹைக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் ஓராண்டுக்கு சிறைத் தண்ட னையை நீடித்தது.

அதையடுத்து, தனது பதவிக் காலத்தின்போது ஊழலில் ஈடுபட்டது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை, 24-லிருந்து 25 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி வரும் பார்க் கியூ-ஹை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner