எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அக்ரா, ஆக. 27- அய்க்கிய நாடு கள் சபையின் ஏழாவது செய லாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-.4.-1938 அன்று பிறந்த இவர் 1-.1.-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-.12.-2006 அன்று ஓய்வு பெற்றார். 2001-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அய்.நா.சபையுடன் பகிர்ந்துகொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலை நகரான ஜெனிவாவுக்கு அரு காமையில் உள்ள பெர்ன் என் னும் இடத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் கடந்த 18-ஆம் தேதி தனது 80-ஆம் வயதில் கோபி அன்னான் காலமானார்.

தலைசிறந்த ராஜதந்திரியா கவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவரு மான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம் பர் 13ஆ-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு அதிபர் நானா அக்குஃபோ-அடோ அறிவித்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner