எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 27- அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை யான செனட் சபையில் அரி சோனா மாநிலத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தவர் ஜான் மெக்கெய்ன் (வயது 81). அமெ ரிக்க கடற்படை அதிகாரியாக இருந்த இவர் வியட்னாம் போரில் கைது செய்யப்பட்டு வடக்கு வியட்னாமில் போர் கைதியாக சிறையில் இருந்தவர்.

இதனால் போர் நாயகனாக அறியப்படும் ஜான், கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர்.  இந்தத் தேர்தலில் பராக் ஒபாமாவிடம் அவர் தோல்வி கண்டார்.

கிளையோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப் புற்று நோயால் இவருக்கு கடுமை யான பாதிப்பு ஏற்பட்டது.  இதற்காக அவர் தொடர்ந்து ஒரு வருடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் அதில் முன்னேற் றம் ஏற்படவில்லை.  இந்நிலை யில் ஜான் மெக்கெய்ன் மரணம் அடைந்து உள்ளார்.  இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அலு வலக தகவலில், செனட் உறுப் பினர் ஜான் மெக்கெய்ன் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி மாலை 4.28 மணியளவில் காலமானார். அமெரிக்காவுக் காக மரணம் அடையும்வரை அவர் 60 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் என்றும் தெரிவிக் கப்பட்டு உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner