எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஆக. 27 -பீகாரில் பாது காப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியாகி நாட்டையே குலுக்கியது.

இந்த நிலையில், பீகாரில் அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மய்யங் களில் உள்ள குழந்தைகளுக்கு இழைக் கப்படும் கொடுமைகள் பற்றி டாடா சமூக அறிவியல் அமைப்பு பட்டிய லிட்டு உள்ளது. இதற்காக பீகாரின் 20 மாவட்டங்களில் உள்ள 21 அரசு நடத் தும் சிறப்பு தத்தெடுப்பு மய்யங்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த மய்யங்களில் ஆதர வற்றோர், வீட்டை விட்டு வெளியேறியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் என 6 வயது வரையிலான குழந்தைகள் தங்கி உள்ளனர்.

இந்த மய்யங்களில் 70 சதவீதம் சிறுமிகள் உள்ளனர். இதில் 3 வயது உடைய சில குழந்தைகள் பேசுவது இல்லை. ஏனெனில், இங்கு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாத தால், குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பும், அவர்களின் துளிர் பரு வத்தில் தேவையானவற்றை கற்பிக்க வும் ஆட்கள் இல்லை என கூறப் படுகிறது.இங்குள்ள குழந்தைகள் சிறிய தவறு செய்தாலும், அவர்களை குளியல் அறையில் அடைத்து வைத் தல், தனிமையில் இருக்க வைத்தல், தகாத சொற்களால் திட்டுதல் என கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்ற னர். இதுபோன்ற தண்டனைகளால் குழந்தைகள் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என அறிக்கை குழுவின் தலைவர் முகமது தாரிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இவர்கள் மிக சிறியவர்கள். குளியல் அறையில் அடைத்து வைப்பது அவர் களை மனதளவில் கடுமையாக பாதிக் கும். எதற்காக தண்டனை வழங்கு கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு புரியாது. இந்த குழந்தைகளுக்கு முறை யான மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்நாள் பற்றிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இங்கு தத்தெடுக்க வரும் பெற்றோர் சிலரால், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படு கின்றனர். அவர்களை திட்டுவது கூடாது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆள் இல்லாதது வருத்த மடைய செய்கிறது என்றார்.மேலும் இந்த அறிக்கையில் மிக முக்கியமாக, சில மய்யங்களில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப் படுவதாகவும், இங்கு உள்ள குழந்தை கள் போதிய உணவு இன்றி பசியுடனே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner