எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி ஹேக், ஆக. 28- ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார்.

மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

குறிப்பாக ஈரானின் எண் ணெய் வளம் மற்றும் ஆற்றல் துறைகளை குறிவைத்து மீண் டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.  இதனால் ஈரான்  பொருளாதாரம் கடுமை யாக சரிந்துள்ளது. அந்நாட்டின் பண மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடை களை எதிர்த்து சர்வதேச நீதி மன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக் கின் மீது விசாரணை தொடங்க உள்ளது. அப்போது ஈரான் அரசு தங்கள் தரப்பு நியாயத் தையும், அமெரிக்காவின் நட வடிக்கையால் ஏற்படும் பாதிப் புகள் குறித்தும் விளக்கமாக கூற உள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சீர்படுத்த முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப் புகளை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தடைகளை விதிப்ப தற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்றும் ஈரான் தனது மனுவில் கூறியிருக்கி றது.

மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப் பீடு வழங்க உத்தரவிட வேண் டும் என்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இந்த அம்சங்களை முன்வைத்து இன்று ஈரான் தனது வாதத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் வாதம் முடிந்ததும், வாசிங்டன் தரப்பு வழக்குரை ஞர்கள் ஆஜராகி வாதாடுவார் கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner