எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காபூல், ஆக. 28- ஆப்கன் உளவுத் துறை தலைவர் மற்றும் அமைச் சர்களின் பதவி விலகல் கடிதங் களை ஏற்க அதிபர் அஷ்ரப் கனி மறுத்துவிட்டார்.

தலைநகர் காபூல் உள்ளிட்ட பல நகரங்களில் தலிபான்களின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, காவல்துறையினர், ராணுவத்தி னர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை கனி தலைமையிலான அரசு கட்டுப் படுத்த தவறியதாக பரவலாக புகார் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், உளவுத் துறை தலைவர், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தமது பதவிகளை விட்டு விலகுவதாக கூறி அதற்கான கடிதத்தை அதி பர் கனிக்கு சனிக்கிழமை அனுப் பினர். அவர்களின் பதவி விலகல் கடிதத்தை பரிசீலனை செய்த அதிபர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு துறை அமைச்சர் தாரிக் ஷா பஹ்ராமி, உள்துறை அமைச்சர் வெயிஸ் அகமது பர்மாக் மற்றும் உளவுத் துறை தலைவர் மஸும் ஸ்டென் கிஸாய் ஆகியோரின் பதவி விலகல் கடிதங்களுக்கு அதிபர் அஷ்ரப் கனி ஒப்புதல் அளிக்க வில்லை.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் தத்தமது பணி களில் தொடர்ந்து ஈடுபட கேட் டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாது காப்பு சூழ்நிலைகளை மேம் படுத்துவதற்கு தேவையான அத்தியவசியமான அறிவுரை கள் அவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளன என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner