எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜிம்பாப்வே, ஆக. 28- ஜிம்பாப்வேயில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்ச்சைகக்குரிய தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் எமர்சன் நங்கக்வா, மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த ராபர்ட் முகாபே போட்டியிடாமல் முதல் முறையாக அந்தத் தேர்தல் நடைபெற்றிருந்தாலும், அதிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவர் தற்போது மீண் டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொருளாதாரம் சரிவு

ஈரான் நிதி அமைச்சர் பதவி நீக்கம்

டெஹ்ரான், ஆக. 28- அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலை போனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை அமைச்சர் மசவுத் கர்பாசியன்அய் அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலை வரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner