எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக.  29- பாகிஸ் தான் ராணுவ தலைமைத் தள பதி ஜாவத் பாஜ்வாவை, அந்த நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் முதல் முறையாக அதி காரப்பூர்வமாக சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பிரதமர் அலு வலகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

ராணுவ தளபதி ஜாவத் பாஜ்வா மற்றும் இம்ரான் கான் இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பு இசுலாமாபாதிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் திங் கள்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டுவது குறித்தும் இரு வரும் ஆலோசனை நடத்தினர்.

நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற் காக இம்ரான்கானுக்கு தளபதி பாஜ்வா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம் ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன் சாஃப் கட்சி, 116 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும் கட் சியாக உருவெடுத்தது.

அதையடுத்து ஒதுக்கீட்டுத் தொகுதி உறுப்பினர்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் நாட்டின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் இந்த மாதம் 18-ஆம் தேதி பொறுப்பேற்றார்.

இந்தத் தேர்தலுக்கான பிரச் சாரத்தின்போதே, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு ஆதரவாக ராணுவம் செயல் பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

பிரசாரம் மேற்கொள்வதற் காக அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வில்லை எனவும், இம்ரானுக்கு எதிரான கட்சிகளுக்கு நெருக் கடிகள் கொடுக்கப்பட்டதாக வும் கூறப்படுகிறது.

மேலும், தேர்தலுக்குப் பிறகு முடிவுகளை அறிவிப்ப திலும், இம்ரானுக்கு ஆதரவாக ராணுவத்தின் தலையீடு இருந் ததாக முக்கிய எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்தச் சூழலில், பிரதமரா கப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ராணுவ தலைமைத் தளபதியை இம்ரான் கான் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner