எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனிவா, ஆக. 29- மியான்மா நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறு பான்மை ரோகிங்யா இன முசு லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆ-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக ஆயுதம் தாங் கிய போராட்டங்களில் ஈடு பட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற் சியில் ராணுவம் ஈடுபட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோகிங்யா முசுலிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மாவில் இருந்த போது ரோகிங்யா இனப் பெண் களை ராணுவத்தினர் கொடூர மான முறையில் பாலியல் வன் கொடுமை செய்ததாக தகவல் கள் வெளியானது.

இந்நிலையில், அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள்  ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதி கள் முகாமில் தங்கியுள்ள மக் களை சமீபத்தில் சென்று நேர் காணல் செய்தனர்.

மியான்மாவில் உள்ள ரக் கினே மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர். பாதிக்கப் பட்ட மக்களை அவர்கள் நேர டியாக சந்தித்து குற்றச்சாட்டு களையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மா ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி  மின் அவுங் ஹிலாய்ங்  ஆகியோரை அவர் கள் சந்தித்துப் பேசினர்.

மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணு வத்தின் அத்துமீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அய்.நா. பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து, சுவிட்சர் லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துறை தலைமையகத்தின் சார்பில்  மார் சுக்கி டாருஸ்மான் தலைமை யில் சர்வதேச நடுவர்களை கொண்ட சுதந்திரமான உண் மையறியும் குழு நியமிக்கப்பட் டது. இந்த குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், ‘ரோகிங்யா மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் ‘இன அழிப்பு’ நோக் கத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner