எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெதர்லாந்து, ஆக. 29- அய்.நா. அவைக்கான நெதர்லாந்து நாட்டின் நிரந்தர பிரதிநிதி காரெல் வான் ஊஸ்டெரோம் தம்முடைய டிவிட்டர் பதிவில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே மிக எளிமையான உடையுடன் மிதிவண்டியில் அலுவலகம் செல்லும் படத்தை பதிவேற்றி, இதுபோன்று, அலுவலகத்துக்கு நம்முடைய பிரதமர் செல்கிறார். நான் மிகவும் பெருமைப்படுவதன் காரணங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

51 வயதாகும் மார்க் ரூட்டே கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து பிரதமர் பதவியில் உள்ளார். 2010ஆம் ஆண்டில் ஆட்சி உரிமை கோரும்போது கூட அவர் அந்நாட்டின் மன் னர் வில்லியம் அலெக்சாண் டரை மிதிவண்டியில் சென்றே சந்தித்தார்.

கடந்த ஆண்டு மோடி நெதர்லாந்து சென்றபோது, அந்நாட்டின் பிரதமரான மார்க் ரூட்டே எளிமையின் சின்ன மான மிதிவண்டியை மோடிக் குப் பரிசளித்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

அவருடைய எளிமை மோடி யிடம் எதிர்பார்க்க முடியுமா? ரூ.10 லட்சம் மதிப்பிலான சட்டை அணிந்த வராயிற்றே நம் நாட்டின் பிரதமர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner