எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாஸ்கோ, ஆக. 30- பனிப் போர் காலத் துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அள வுக்கு மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை ரசியா நடத்தவிருக்கிறது.

சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போர் ஒத்திகையில், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 3 லட்சம் வீரர்கள், 36,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத் தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

தங்களது எல்லை அருகே நேட்டோ மூலம் அய்ரோப்பிய நாடுகள் அளவுக் கதிகமாக படை பலத்தைப் பெருக்கி வருவதாக ரசியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளின் ஆதிக்கத் துக்கு சவால் விடுக்கும் வகையில் இந் தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ரசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் சோய்கு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

விஸ்டோக் -2018 என்ற எங்களது இந்த ஆண்டுக்கான போர் ஒத்திகை, அடுத்த மாதம் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கிழக்கு எல்லைப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்தப் போர் ஒத்திகையில், ரசியாவுடன் இணைந்து சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

கடந்த 1981-ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஸாபாட்-81 போர் ஒத்திகையைவிட அதிக எண் ணிக்கையில், தளவாடங்களும், போர் வீரர்களும் 'விஸ்டோக்-2018’-இல் ஈடு படுத்தப்படுவர்.

இந்தப் போர் ஒத்திகையில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங் களும், டேங்க்குகள், கவச வாகனங்கள், தரைப் படைத் தளவாடங்கள் என 36,000 ராணுவ தளவாடங்களும் இந்த போர் ஒத்திகையில் ஈடுபடுத்தப்படவுள் ளன.

ஏறத்தாழ நிஜமான போருக்கு இணை யான சூழலை ஏற்படுத்தி, இந்தப் போர் ஒத்திகை மேற்கொள்ளப்படும் என்றார் செர்கெய் ஷோய்கு.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஸாபாட் -2017 போர் ஒத்திகையின்போது, 12,700 வீரர்கள் பங்கேற்றதாக கூறப்பட் டது. எனினும், அந்தப் போர் ஒத்திகை யில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர் கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று நேட்டோ குற்றம் சாட்டியது.

இந்தச் சூழலில், தற்போது இந்த ஆண்டு நடைபெறும் போர் ஒத்திகை யில் 3 லட்சம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று ரசியா அறிவித்துள்ளது குறிப்பி டத்தக்கது.

உக்ரைன் விவகாரத்தில் அய்ரோப் பிய நாடுகளுக்கும், ரசியாவுக்கும் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், அய்ரோப்பாவுடனான தங்க ளது மேற்கு எல்லைப் பகுதியில் அமெ ரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும் இடம் பெற்றுள்ள நேட்டோ அமைப்பு தனது படை பலத்தை அளவுக்கு அதிக மாகப் பெருக்கி வருவதாக ரசிய அதிபர் விளாதிமீர் புதின் குற்றம் சாட்டி வரு கிறார்.

இந்தச் சூழலில், அமெரிக்காவுட னான பனிப் போர் காலத்தில் மேற் கொள்ளப்பட்டதைவிட மிகப்பெரிய அளவிலான போர் ஒத்திகையை மேற்கு எல்லைப் பகுதியில் ரசியா மேற்கொள் வது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner