எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஆக. 30- பாகிஸ் தானின் புதிய பிரதமராக இம் ரான்கான் பதவி ஏற்றார்.

அப்போது இந்தியாவுடன் ஆன அனைத்து பிரச்சினைக ளையும் குறிப்பாக காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தயாராக இருப் பதாக தெரிவித்தார்.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் அமைச்சர் சிரீன் மசாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண் டார்.

அப்போது காஷ்மீர் பிரச்சி னையை தீர்க்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து இருப் பதாக கூறினார். அந்த அறிக்கை பிரதமர் இம்ரான்கான் மற்றும் காபினெட் அமைச்சர்களுக்கு அனுப்பப்படும்.

அதற்கு ஒப்புதல் கிடைத் தவுடன் அதை செயல்படுத்து வதில் தீவிரம் காட்டப்படும் என்றார். இவர் அரசியல் தந்தி ரம் சார்ந்த கல்வி துறையில் டைரக்டர் ஜெனரலாக பணி புரிந்துள்ளார்.

இசுலாமாபாத்தில் உள்ள குயாத்-இ-ஆசம் பல்கலைக் கழ கத்தில் பாதுகாப்பு துறை பேராசி ரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner