எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டெக்ரான், ஆக. 31- மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் அய்ரோப் பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், அய்.நா சபையில் புகார் கூறிய அமெ ரிக்கா, அந்நாட்டின் மீது கடு மையான பொருளாதார தடை களை விதிக்கச் செய்தது.

ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்ப தற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயு தங்கள் எதையும் தயாரிக்க வில்லை என்றது. இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்சு, ரஷ்யா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடு மையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது.

இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடு களுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 14-.7-.2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஈரானில் யுரேனியத்தை செறி யூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் சென்ட்ரிபியூஸ் எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப் படும், அடுத்த 15 ஆண்டுக ளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிக மாக யுரேனியத்தை செறிவூட் டக் கூடாது என முடிவு செய் யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு முன் னதாக ஈரானில் சேமித்து வைக் கப்பட்டுள்ள யுரேனியத்தை கப்பலில் ஏற்றி வெளிநாடு களுக்கு அனுப்பிவிட வேண் டும் என்ற நிபந்தனைக்கும் ஈரான் சம்மதித்தது. அதன்படி, அதிகப்படியான இருப்பில் இருந்த யுரேனியம் கப்பல் களில் ஏற்றப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைக்கப்பட் டன.

இதைத்தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா மற் றும் அதன் நேசநாடுகள் விலக்கி கொண்டன.

ஆனால், இந்த ஒப்பந்தத் துக்கு பின்னரும் ஈரான் ரகசி யமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சமீபத்தில் இசு ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன் யாகு வீடியோ ஆதாரத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்திருப் பதால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரான் சந்தித்து  வரும் வர லாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால்  நீதி விசாரணைக்கு நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடை பெற்ற அமைச்சரவை கூட்டத் தில் பேசிய ஆளும்கட்சி தலை வர் அயாத்துல்லா கமேனி, நமது நாட்டின் நன்மைக்கு உதவாவிட்டால், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நாம் தயாராக இருக்க வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.