எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மணிலா, செப். 2- பிலிப்பைன்சு அரசின் உடன்பாட்டுடன் அந் நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ஆம் ஆண்டுமுதல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகி றது.

ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது விமான விபத்தில் மறைந்த முன்னாள் பிலிப்பைன்சு அதிபர் ரமோமன் மகசேசே நினைவாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த உய ரிய விருதுக்கு தேர்வு செய்யப் பட்ட இரு இந்தியர்களான மும்பையை சேர்ந்த பரத் வட் வானி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக் உள் பட 6 பேர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த விருதை பெற்றனர்.

இவர்களில் மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் அவரது மனைவி ஆகியோர், மனநலம் குன்றி மும்பை வீதி களில் திரியும் நோயாளிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான இலவச உறவி டம், உணவு மற்றும் சிகிச்சை அளித்து பின்னர் குணமடைந்த பிறகு அவர்களின் உறவினர் களிடம் ஒப்படைக்கும் அரிய சேவையை செய்து வந்துள் ளனர். இதற்காக 1988-ம் ஆண் டில் சாரதா மறுவாழ்வு மய்யம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பரத் வட்வானி ஆற்றிய தொண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக், தனது 19-ஆவது வயதில் பொறியியல் கல்வி பயின்றுவந்தபோது கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், படிப்பில் பின்தங்கிய நிலை யில் அரசு தேர்வுகளில் வெற்றி பெறாமல் இருந்த மாணவர்க ளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார்.

பின்னர் 1988-ஆம் ஆண்டில் லடாக் மாணவர் கல்வி கலாச் சார கழகம் என்னும் அமைப்பை தொடங்கி பல்லாயிரம் மாண வர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவர் உழைத்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை தவிர பிலிப் பைன்சு நாட்டை சேர்ந்த ஹோவார்ட் டி, கம்போடி யாவை சேர்ந்த யோவ்க் சாங், கிழக்கு டைமூர் நாட்டை சேர்ந்த மரியா டி லூர்ட்ஸ் மார்ட்டின்ஸ், வியட்நாம் நாட்டை சேர்ந்த வோ தி ஹோவாங் என் ஆகியோருக்கும் இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டது.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}

 

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு ரமோன் மகசேசே விருதுகள்


மணிலா, செப். 2- பிலிப்பைன்சு அரசின் உடன்பாட்டுடன் அந் நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ஆம் ஆண்டுமுதல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகி றது.  
ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது விமான விபத்தில் மறைந்த முன்னாள் பிலிப்பைன்சு அதிபர் ரமோமன் மகசேசே நினைவாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த உய ரிய விருதுக்கு தேர்வு செய்யப் பட்ட இரு இந்தியர்களான மும்பையை சேர்ந்த பரத் வட் வானி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக் உள் பட 6 பேர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த விருதை பெற்றனர்.
இவர்களில் மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் அவரது மனைவி ஆகியோர், மனநலம் குன்றி மும்பை வீதி களில் திரியும் நோயாளிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான இலவச உறவி டம், உணவு மற்றும் சிகிச்சை அளித்து பின்னர் குணமடைந்த பிறகு அவர்களின் உறவினர் களிடம் ஒப்படைக்கும் அரிய சேவையை செய்து வந்துள் ளனர். இதற்காக 1988ஆ-ம் ஆண் டில் சாரதா மறுவாழ்வு மய்யம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பரத் வட்வானி ஆற்றிய தொண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக், தனது 19-ஆவது வயதில் பொறியியல் கல்வி பயின்றுவந்தபோது கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், படிப்பில் பின்தங்கிய நிலை யில் அரசு தேர்வுகளில் வெற்றி பெறாமல் இருந்த மாணவர்க ளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார்.
பின்னர் 1988-ஆம் ஆண்டில் லடாக் மாணவர் கல்வி கலாச் சார கழகம் என்னும் அமைப்பை தொடங்கி பல்லாயிரம் மாண வர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவர் உழைத்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்களை தவிர பிலிப் பைன்சு நாட்டை சேர்ந்த ஹோவார்ட் டி, கம்போடி யாவை சேர்ந்த யோவ்க் சாங், கிழக்கு டைமூர் நாட்டை சேர்ந்த மரியா டி லூர்ட்ஸ் மார்ட்டின்ஸ், வியட்நாம் நாட்டை சேர்ந்த வோ தி ஹோவாங் என் ஆகியோருக்கும்  இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தின் மீது விண்கல் மோதி விபத்து
வாசிங்டன், செப். 2- விண்வெளி யில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தின் மீது மோதியது.
இந்த மோதலினால் விண் வெளி ஆய்வு மய்யத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற் கட்டமாக அடைத்துவிட்டு, தற்போது முழுமையாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.
2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப் பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மய்யத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரசியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஹெச்1பி’ விசா கொள்கையில் மாற்றம் இல்லை: அமெரிக்க உயரதிகாரி தகவல்
வாசிங்டன், செப். 2- ஹெச்1பி’ விசா வழங்கும் கொள்கையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
அமெரிக்கப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஹெச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
ஹெச்1பி’ விசா வழங்கும் கொள்கைகளிலும் எந்த மாற்ற மும் மேற்கொள்ளப் படவில்லை என்று அந்த அமெரிக்க உயரதிகாரி தெரிவித்தார்.
பல்வேறு இந்தியப் பணியாளர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாக, தனியார் நிறுவனம் ஒன்று கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி டில்லியில் நடைபெறவுள்ள, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில், விசா விவகாரம் தொடர் பாக விவாதிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.


எம்.பி. பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் பதவி விலகல்


ஆஸ்திரேலியா, செப். 2- ஆஸ்தி ரேலியாவில், ஆளும் லிபரல் கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக அண்மை யில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினார்.
இதையடுத்து, நாடாளுமன் றத்தில் ஆளும் கட்சியின் பெரும் பான்மை அபாயகரமான அள வுக்குக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஆளும் லிபரல் கட்சி ஒரே ஒரு கூடுதல் எம்.பி.யின் ஆதரவு டன் மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை ஏற் பட்டுள்ளது.
மால்கம் டர்ன்புல்லின் பதவி விலகல் குறித்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:
முன்னாள் அதிபர் மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனது 14 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் வென்ட்வெர்த் தொகுதி வாக்காளர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், பிரதமராக தனது பணியை சிறப்புற மேற் கொண்டார் என்று மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிராக, கட்சியின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான பீட்டர் டட்டன் அண்மையில் போர்க் கொடி தூக்கினார்.
அதையடுத்து, டர்ன்புல் மற்றும் டட்டனுக்கு இடையே தலைமைப் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், 48 வாக்குகள் பெற்று பிரதமர் டர்ன்புல் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பீட்டர் டட்டனுக்கு 35 வாக் குகள் கிடைத்தது. இதைய டுத்து, பதவி நீக்க முயற்சியில் இருந்து டர்ன்புல் தப்பினார்.
எனினும், அவரது தலை மைக்கு எதிராக டட்டன் தொடர்ந்து போராடியதைத் தொடர்ந்து, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பெரும்பான்மையான லிபரல் கட்சி எம்.பி.க்கள் மனு தாக்கல் செய்தனர். அதையடுத்து, தனது தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் மால்கம் டர்ன்புல் விலகினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப் பில், கிளர்ச்சியைத் தொடங்கி வைத்த பீட்டர் டட்டனை நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் தோற்கடித்து, கட்சியின் புதிய தலைவராகவும், நாட்டின் 30-ஆவது பிரதமராகவும் பொறுப் பேற்றுக் கொண்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய மியான்மாவின் கிராமங்கள் - மீட்பு பணி தீவிரம்


யாங்கூன், செப். 2- மத்திய மியன்மா பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு, பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீய ணைப்பு வீரர்கள், மீட்பு குழு வினர் ஆகியோர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். வெள்ளத் தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
ஸ்வர் சாங் அணை நீர்ப் பாசனத்துக்காக கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருக்கும் இந்த அணை முறையாக பராமரிக்கப் படாததாலேயே அணை உடைந் திருக்ககூடும் என கூறப்படுகிறது.


கட்டுமான சாதனங்களின்
தொழில் விற்பனையகம்!
சென்னை, செப். 2- நாட்டின் உள்கட்ட மைப்பு, நகர்ப்புற சுற்றுப்புற சூழல் போன்ற தாக புதிய பரிமாணத்துடன் வளர்ச்சி காண் பதற்கான திட்டங்களுக்கு தேவையான கட்டுமானப் பொருள்கள், வீட்டு அலங்கார சாதனங்களின் தமது தொழில் விற்பனை யகத்தை துபாயை சேர்ந்த தனுபே ஹோம் (ஞிuதீணீவீ’s ஞிணீஸீuதீமீ பிஷீனீமீ) நிறுவனம் அய் தராபாத்தில் அக்டோபர் 2018 முதல் தொடங்க உள்ளதை அறிவித்துள்ளது.
மேலும் வரும் அய்ந்து ஆண்டுகளுக் குள் 10 மிகப் பெரிய விற்பனையகங்களை யும், சரக்கு சேவை மய்யம், போக்குவரத்து நெட் ஒர்க், மற்றும் பல சேவைகளை இந்தியாவில் இந்நிறுவனம் நிறுவ உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வ தால் நகர்புறங்களில் உள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இந்தியா அரேபியா நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என இந்நிறுவன இயக் குநர் அடெல் சாஜன் தெரிவித்துள்ளார்.காப்பீட்டு நிறுவனத்தில்
உடல் நல சேவை திட்டம்
சென்னை, செப். 2- கோட்டக் மகிந்திரா லைஃப் காப்பீட்டு நிறுவனமான 'கோட்டக் லைஃப்' (ரிஷீtணீளீ றீவீயீமீ), ஏழை எளிய மக்களின் உடல்நல சேவைக்கான அதன் கார்பரேட் சமூக பொறுப்புறுதி திட்டமான 'லைஃப் ஃபர்ஸ்ட்‘ என்பதை தொடங்கியிருக்கிறது.
இதன் ஒரு அங்கமாக சென்னையில் 3 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை (விவிக்ஷிஷி) களப்பணியில் ஈடுபடுத்துவதற்கான ஹோக்ஹார்ட் ஃபவுண்டேசனுடன் (கீஷீநீளீ பிணீக்ஷீபீt திஷீuஸீபீணீtவீஷீஸீ) கோட்டக் லைஃப் இணைந்து செயல்பட்டிருக்கிறது. இந்த நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் (விவிக்ஷி) என்பவை நடமாடும் ஆரம்ப சுகாதார மய்யங்களாக (ஞிபிசி) செயல்படும்.
உடல நல சேவைக்கான எமது சிஷிஸி செயல்திட்டமான 'லைஃப் ஃபர்ஸ்ட்' அடிப்படை உடல்நல பராமரிப்பு சேவை களின் தேவையைக் கொண்டு சென்னையில் வசதியற்ற வர்கள் வாழ்கின்ற குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சேவை வழங்க ஒரு வாய்ப்பை இது எங்களுக்கு தந்திருக்கிறது என கோட்டக் மகிந்திரா லைஃப் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.முரளிதர் தெரிவித்துள்ளார்.

வோடபோன் - அய்டியா இணைந்தது


டில்லி, செப். 2- அய்டியா செல்லுலார் மற்றும் வோடபோன் நிறுவனங்க ளின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்ததாக அந்நிறுவனங் கள் கூட்டாக அறிவித்தன. இந்த இணைப்பையடுத்து புதிததாக உரு வாகியுள்ள நிறுவனம் நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அய்டியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பானது 2,320 கோடி டாலர் மதிப்பிலானதா கும். இந்திய மதிப்பில் இது ரூ.1.60 லட்சம் கோடியாகும். தற்போது, இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் முழுமையடைந்து இரு நிறுவனங்களும் ஒன்றாகியுள் ளன.  இணைப்பு பிறகான உதயமான நிறுவனத்துக்கு வோடபோன் அய் டியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்புதிய நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் மொத்த வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை 40.8 கோடியாக இருக்கும். ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவை சந்தை பங்களிப்பில் இது 35 சதவீதமாகும்.
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெற்று செல்லிடப்பேசி சேவை வழங்கு வதில் பார்தி ஏர்டெல் நிறுவனமே முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், இணைப்பின் காரணமாக புதிதாக உருவாகியுள்ள வோட போன் அய்டியா நிறுவனம் வாடிக் கையாளர்கள் எண்ணிக்கையில் ஏர்டெல் நிறுவனத்தை விஞ்சியுள் ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அய்டியா செல்லுலாரின் தலைவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா. இவர்தான் தற்போது இணைப்பில் உருவாகும் புதிய நிறு வனத்துக்கும் தலைவராக இருப்பார். இந்நிறுவனத்துக்கு 12 உறுப்பினர் களைக் கொண்ட இயக்குநர் குழுவும் இருக்கும். தலைமை நிதி அதிகாரி வோடபோன் சார்பில் நியமிக்கப்படுவார்.
வேடாபோன்-அய்டியா இணைந்து புதிய நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரியாக பாலேஷ் சர்மாவை தேர்ந்தெடுத்து உள்ளன. வோடபோன்-அய்டியா இணைப்பு என்பது நிறுவன உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை இத்துறையில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய தொலைத் தொடர்பு செயலர் அருணா சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்கள்குத்துச்சண்டை: தங்கம்
ஜகார்த்தா, செப். 2- ஆசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை விளையாட் டில், ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக தாம் களம் கண்ட ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார் அமித் பங்கால்.
அத்துடன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 8-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அமித் பங்கால், 49 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில், ஒலிம்பிக் நடப்பு வாகையரும், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருமான ஹசன்பாய் தஸ்மடோவை 3--2 என்ற கணக்கில் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார்.
இதன்மூலமாக, கடந்த ஆண்டு உலக வாகையருக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் ஹசன்பாயிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமித் பங்கால். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஒரே வீரர் அமித் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய அமித் பங் கால், “ஹசன்பாயிடம் ஏற்கெனவே தோற் றிருந்ததால், அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. பயிற்சியாளர் சான்டியாகோ நீவா உள்ளிட்ட அனைவ ருமே எனக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்திருந்தனர்.
அரையிறுதிச் சுற்றில், முதல் சுற்றை சரிவர கையாளவில்லை. அந்தத் தவறை இங்கே செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இங்கிலாந்து மற் றும் இந்தியாவில் பெற்ற பயிற்சிகள் பல னளித்தன. அப்பர் கட் முறையை திறம்பட கையாண்டேன்’ என்றார். அரியானாவைச் சேர்ந்த அமித் பங்கால், இந்திய ராணு வத்தில் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக, மிடில் வெயிட் பிரிவில் விகாஸ் கிருஷன் வென்ற வெண்கலப் பதக்கமும் சேர்த்து, குத்துச் சண்டை போட்டியை இந்தியா 2 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
ஸ்குவாஷ்: வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் விளையாட்டில், மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
சுனேனா குருவில்லா, ஜோஷ்னா சின் னப்பா, தீபிகா பலிக்கல், தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தனது இறுதிச்சுற்றில் ஹாங் காங்கிடம் 0--2 என்ற கணக்கில் வீழ்ந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய மகளிரணி வெள்ளிப் பதக்கம் வெல்வது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மக ளிரணி இதேபோன்று வெள்ளி வென்றிருந் தது.
இந்த சீசனில் இந்திய ஸ்குவாஷ் அணி யினர், மகளிர் அணி பிரிவில் வெள்ளி, ஆடவர் அணி பிரிவில் வெண்கலம், தனி நபர் பிரிவில் 3 வெண்கலம் என மொத்த மாக 5 பதக்கங்கள் வென்றுள்ளனர்.
முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 88-ஆம் நிலை வீராங்கனையான இந்தியா வின் சுனேனா குருவில்லா -- உலகின் 51-ஆம் நிலையில் உள்ள ஹாங் காங்கின் ஜெ லோக் ஹோவுடன் மோதினார். இறுதி யில் சுனேனா 8--11, 6--11, 12--10, 3--11 என்ற செட்களில் வீழ்ந்தார்.
அடுத்த ஆட்டத்தில் உலகின் 16-ஆம் நிலை வீராங்கனையான ஜோஷ்னா சின் னப்பா 3--11, 9--11, 5--11 என்ற செட்களில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான விங் சி அன்னியிடம் தோற்றார்.
ஹாக்கி: வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட் டத்தில் பாகிஸ்தானை 2--1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் உலகின் 5-ஆம் நிலை அணியான இந்தியாவின் சார்பில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் கோலடிக்க, உலகின் 13-ஆம் நிலை அணியான பாகிஸ்தான் தரப்பில் முகமது அட்டிக் ஒரு கோலடித்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந் தியா 2 முறை கோலடிக்க முயற்சித்தது. 3-ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் இந்தியாவின் கோல் கணக்கை தொடங் கினார். லலித் உபாத்யாய் கடத்திய பந்தை திறம்பட கையாண்டு, பாகிஸ்தான் கோல் கீப்பரைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் ஆகாஷ்தீப் சிங்.
இதனால் உத்வேகம் பெற்ற இந்திய அணியினர் வேகமான ஆட்டத்தை வெளிப் படுத்தினர். எனினும், தனது முதல் கோலுக்கே போராடி வந்த பாகிஸ்தான், இந்தியா மேலும் கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டது.
ஆட்டத்தின் 22-ஆவது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து கிடைத்த 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் வீணா னது. இதனால், முதல் பாதியில் இந்தியா 1--0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் 50-ஆவது நிமிடத்தில் இந்தி யாவின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார் ஹர்மன்பிரீத் சிங். அணிக்கு முதல் முறையாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை டிராக் ஃப்ளிக் செய்து கோலாக்கினார் ஹர்மன்பிரீத் சிங்.
இதனால், இந்தியா 2--0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் 52-ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு சற்று நெருக்கடி அளித்தது. எனினும், தொடர்ந்து கோல் விழாமல் பார்த்துக் கொண்ட இந்தியா, இறுதியில் 2--1 என்ற கோல் கணக்கில் வென்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner