எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரேசிலியா, செப். 3- பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக் டோபர்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா (வயது 72) விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் இவர், அரசு எண் ணெய் கம்பெனியின் பணி ஒப்பந்தம் வழங்குவதற்கு ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக் கில் 12 ஆண்டு சிறைத் தண் டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண் டனை அனுபவித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் அதி பர் தேர்தலில் போட்டியிடுவ தற்கு அந்த நாட்டின் தேர்தல் நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட் டவர், தேர்தலில் நிற்க முடி யாது என அந்த நீதி மன்றம் கூறி விட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய் யப்போவதாக லுலாவின் வழக் குரைஞர்கள் குழு அறிவித்து உள்ளது.

இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடு வோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிக ளில் இறங்கி போராடப்போவ தாகவும் கூறி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner