எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திரிபோலி, செப். 4- லிபியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டில் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். அதில் கடாபி கொல்லப்பட்டு அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தீவிரவாத குழுக்களின் கை ஓங்கியது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். பின் னர் அங்கிருந்து 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவுமில்லை.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும் பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதர வாளர்கள் ஆவர்.

கடந்த ஒருவாரமாக லிபியா தலைநகரான திரிபோலியில் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

சிலி நாட்டில் உருவாகி வரும் உலகின் அதி நவீன தொலைநோக்கி

சிலி, செப். 4- உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப், வருகிற 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.

சிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டாலர் செயல்திட்டத்துக்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் தொடங்கிவிட்டனர்.

புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே தொழி லாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற் படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளி வான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படு கிறது.