எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுஏஇ, செப். 5- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, அய்க்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சார்பில் முதல்முறையாக இரண்டு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்களது பெயரை, அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் வெளியிட்டுள்ளார்.

ஹசா அல்-மசூரி (34), சுல்தான் அல் நேயாதி (37) ஆகிய அந்த இரு வீரர்களும் அய்க்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு முன்னோடியாக திகழ்வர்’ என்று சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அய்க்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 4 பேர், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்படுவர் என்றும், இதற்காக 5.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,000 கோடி) செலவிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஷேக் முகமது கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஹோப்’ என்ற பெயரிலான திட்டம் 2021-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத் தப்படும் என்று யுஏஇ ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தாய்லாந்து செல்ல எளிய முறையில் விசா

சென்னை, செப். 5- பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த நாடாக தாய்லாந்து தற்போது விளங்கி வருவதால், விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தாய்லாந்து சுற்றுலா ஆணைய நிர்வாகிகள் வாலாய்லக் நொய்பக், சோலட சித்திவர்ன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர்கள் செய் தியாளர்களிடம் கூறியது: கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தாய்லாந்துக்கு சுமார் 10,000 இந்தியர்கள் சுற்றுலா வந் துள்ளனர். விசா நடைமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்த 3 நாள்களுக்குள் விசா பெறமுடியும். அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளைக் கண்டறிந்து அவர் களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கும் திட்டமும் பரிசீல னையில் உள்ளது. குறிப்பாக நடப்பாண்டில் சென்னை, இந்தூர் போன்ற நகரங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரத் திட்டமிட்டுள்ளோம்.