எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொரியா, செப். 7- இரு கொரிய நாடுகளின் அதிபர்களுக்கிடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து, தென்கொரியாவின் 5 உயரதிகாரிகள் அடங்கிய தூதுக்குழு ஒன்று வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடன் சந்தித்து ஆலோசனை நடத்தியது.

இது தொடர்பாக தென்கொரிய செய் தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடைய சிறப்புத் தூதுவரான சுங் யீ-யோங் தலைமையிலான தூதுக்குழு ஒன்று, வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை புதன்கிழமை சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பின் போது, வடகொரியாவிலுள்ள அணுசக்தியை முற்றிலுமாக அழிப்பது குறித்தும், இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அதிபர் மூன் ஜே-இன் கொடுத்து அனுப்பிய தனிப்பட்ட கடிதம் ஒன்றையும், அதிபர் கிம் ஜோங்-உன் இடம் தூதுக்குழு ஒப் படைத்தது.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தி அற்ற, அமைதி நிலவும் பகுதியாக மாற் றுவதில் இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில், வட கொரியா அணுசக்தியை முற்றிலுமாக அழிப்பது என்றும், அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வடகொரியா, அணுசக்தியை அழிப்பதற்கான எந்தவொரு நடவடிக் கையையும் இதுவரை எடுக்கவில்லை என்று கடந்த மாதம் பன்னாட்டு அணுசக்தி ஆற்றல் முகமை, குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் வடகொரிய பய ணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். இந்நிலையில், அணுசக்தியை அழிப்பது தொடர்பாக வட மற்றும் தென் கொரிய அதிபர்களுக்கு இடையே இம்மாத இறுதியில் நடைபெற இருக் கும் பேச்சுவார்த்தை சிறப்புடன் அமைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வாழ்த் துகளை, தென் கொரிய அதிபருக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

வட மற்றும் தென் கொரிய அதிபர் களுக்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த முதலாவது பேச்சுவார்த்தையின் போது, 1950 முதல் 1953 வரை நிகழ்ந்த கொரியப் போரினை அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்து, ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், வட கொரியாவில் முற்றிலுமாக அணு சக்தியை அழித்த பிறகே, ஒப்பந்தத்துக் கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner